search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் பணம் கேட்டு தொழிலாளியை கடத்திய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட உத்திராபதி. 

    கும்பகோணத்தில் பணம் கேட்டு தொழிலாளியை கடத்திய வாலிபர் கைது

    • தொழிலாளி ஒருவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.
    • போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை கைது செய்தனர்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43) தொழிலாளி. இவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம் செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபர் பாபநாசம் அருகே உத்தமதானியை சேர்ந்த உத்திராபதி (25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பதுங்கி இருந்த உத்திராபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரமேஷ்பாபுவை பத்திரமாக மீட்டனர்.

    இவ்வழக்கை விரைவாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×