என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.கே. நகரில் தண்ணீர் தொட்டி மீது தூங்கியவர் தவறி விழுந்து உயிரிழப்பு
- குணா அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்து தூங்கினார்.
- குணாவுக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
போரூர்:
சென்னை கே.கே. நகர் 10-வது செக்டார் 62-வது தெருவில் உள்ள வீட்டின் 3வது தளத்தில் வசித்து வந்தவர் குணா (வயது 40). இவர் சினிமா துறையில் வேலை பார்த்து வந்தார்.
இரவு மதுபோதையில் குணா வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது அறையில் இருந்த மின்விசிறி பழுதாகி இருந்தது. இதனால் அவர் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்து தூங்கினார்.
மதுபோதையில் இருந்த குணா உருண்டு படுத்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குணாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை குணா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.