search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்ட ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல், களிமண் எடுத்து கொள்ள விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சை மாவட்ட ஏரி, குளங்களில் இலவசமாக வண்டல், களிமண் எடுத்து கொள்ள விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமல் எடுக்க அனுமதி.
    • 2 ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    அரசாணைப்படி மாவட்டத்தில் 260 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதன்படி தஞ்சை தாலுகாவில் 2 ஏரி, குளங்கள், ஒரத்தநாடு தாலுகாவில் 35, பூதலூரில் 2, பட்டுக்கோட்டையில் 160, பேராவூரணி தாலுகாவில் 61 ஏரி குளங்கள் என மொத்தம் 260 ஏரி, குளங்களில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம்.

    எனவே தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சம்மந்த ப்பட்ட வட்டாட்சியர்களது பரிந்துரையின்படி கலெக்டரால் (என்னால்) அனுமதி வழங்கப்படும்.

    விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம் வண்டல் மண், களிமண் எடுக்க, விண்ணப்பிக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ள அல்லது

    அதனைச் சுற்றியுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும். விவசாயப் பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமலும் மற்றும் புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

    பொதுமக்களின் சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

    எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் தங்களது சொந்த உபயோகத்திற்கு வண்டல் மண் , களிமண் போன்றவை தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பித்து என்னிடம் அனுமதி பெற்று வண்டல் மண்,களிமண் எடுத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×