என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில் ரூ.4½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
    X

    அரூரில் ரூ.4½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 90 விவசாயிகள் 100 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மஞ்சள் விற்பனை ஆனது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.

    அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 90 விவசாயிகள் 100 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் விரலி ரக மஞ்சள் ரூ.5,689 முதல் ரூ.6,509 வரையும், கிழங்கு ரக மஞ்சள் ரூ.4,629 முதல் ரூ.5,819 வரையிலும், குருனை மஞ்சள் ரூ.4,749 முதல் ரூ.5,149 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மஞ்சள் விற்பனை ஆனது.

    Next Story
    ×