என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மழை நீரில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
- சேற்றில் கால் சிக்கியதால் தவறி வயலில் தேங்கிய தண்ணீரில் விழுந்துள்ளார்.
- மீண்டு எழ முடியாமல் தண்ணீரில் மூச்சு திணறி உயிரிழந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45).
தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள கதிர் விஸ்வலிங்கம் என்பவருக்கு சொந்தமான 20 ஏக்கர் விலை நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இரண்டு நாட்களாக மழை பெய்த நிலையில் வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக இன்று வரப்புகளை வெட்டி அகற்றும் பணியை கனகராஜ் மேற்கொண்டுள்ளார்.
அப்பொழுது மழையின் காரணமாகவும் சேற்றில் சிக்கியதால் தவறி வயலில் தேங்கிய தண்ணீரில் விழுந்துள்ளார்.
சேற்றில் சிக்கியதால் மீண்டு எழ முடியாமல் தண்ணீரில் மூச்சு திணறி அங்கேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும்
பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கூலி தொழிலாளியான கனகராஜ் இறந்த சம்பவம் காத்திருப்பு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.