search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் பாதையில் தளர்வான பாறைகளை அகற்றும் பணி
    X

    ரெயில் பாதையில் தளர்வான பாறைகளை அகற்றும் பணி

    • மழைக்காலங்களில் ரெயில் பாதையில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.
    • தற்போது 300 மீட்டர் தூரம் வரை தளர்வான பாறைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரெயில் நிலையம் அருகில் பெங்களூரு முதல் தருமபுரி வழியாக சேலம் செல்லும் ரெயில் பாதை அமைந்துள்ளது.

    இந்த ரெயில் பாதையின் வழியாக தினசரி ரெயில்களும் வாராந்திர ரெயில்களும் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, கன்னியாகுமரி, கேரள மாநிலம் வரை இயக்கப்படும் பிரதான ரெயில் பாதையாக தருமபுரிரெயில்வே பாதை உள்ளது.

    இந்த ரெயில் பாதையில் சிவாடி ரெயில் நிலையம் முதல் முத்தம்பட்டி ரெயில் நிலையம் வரை உள்ள பாதையில் இருபுறங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் மழைக்காலங்களில் ரெயில் பாதையில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு கன மழையின் காரணமாக அதிகாலையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சரிந்ததின் காரணமாக அந்த மார்கத்தில் வந்த ரெயில் விபத்தில் சிக்கியது. அப்போது ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    அப்போது முதல் தொடர்ந்து தளர்வாக உள்ள மலைப்பகுதியில் விரிசல்கள் அடைந்துள்ள பாறைகள், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்டறிந்து முதற்கட்டமாக தற்போது 300 மீட்டர் தூரம் வரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயில் பாதை முழுவதும் மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் ரெயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிவு மற்றும் விபத்துக்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் அவற்றை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×