search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் 183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான தொழிற்கடன் உதவி
    X

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க பயனாளிகளுக்கு கடன் உதவியை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி மாவட்டத்தில் 183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான தொழிற்கடன் உதவி

    • தொழிற்கடன் வழங்கும் முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
    • மொத்தம் 427 நபர்களுக்கு ரூ.68.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் மூலம் புதிய தொழில் தொடங்கு வதற்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காகவும் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கி பேசியதாவது:-

    மாவட்ட அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்ப தற்காகவும் தொழில் வளத்தை மேம்படுத்து வதற்காகவும் தொழிற்கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய முற்படும்போது, தொழிலை பற்றிய முழு புரிதல் இருப்பதுடன், வங்கி கடனை திரும்ப செலுத்துவ திலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழில் முனைவோரால் மட்டுமே சமுதாயத்தில் வேலைவாய்ப்பினை பிறருக்கு வழங்கி அவர்க ளின் வாழ்வதாரத்தினை உயர்த்த முடியும்.

    மேலும் தேனி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழி ல்களை ஊக்குவிப்பதற்காக ஜுலை மாதம் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் முகாமில் 244 நபர்களுக்கு ரூ.38.44 கோடி மதிப்பிலான கடனுதவியும், இந்த முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகள் என இதுவரை மொத்தம் 427 நபர்களுக்கு ரூ.68.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×