search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் வாழ்வாதார சேவை மையம்- கலெக்டர் திறந்து வைத்தார்
    X

    மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    மகளிர் வாழ்வாதார சேவை மையம்- கலெக்டர் திறந்து வைத்தார்

    • பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்குதல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திறந்து வைத்து மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது-

    வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது உலக வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும்.

    திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி வட்டத்தில் 51 கிராம ஊராட்சிகளிலும், வலங்கைமான் வட்டத்தில் 50 கிராம ஊராட்சிகளிலும், நீடாமங்கலம் வட்டத்தில் 44 கிராம ஊராட்சிகளிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் 29 கிராம ஊராட்சிகளிலும் மொத்தம் 174 கிராம ஊராட்சிகளில் இத்திட்டமானது செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    முந்தைய திட்டங்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள், வளங்கள் மற்றும் திறன்களை கொண்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்களே இத்திட்டத்தின் முதன்மை இலக்கு ஆவர்.

    இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்தி றனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    தொழில் முனைவோ ருக்கும் தொழில் நிறுவனங்க ளுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்கு வதற்காக திட்டத்தின் மூலம் "மகளிர் வாழ்வாதார சேவை மையம்" தொடங்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்குதல், ஊரகப்பகுதிகளில் உள்ள புதிய மற்றும் பழைய தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவர்களது தொழில் வளர்ச்சிக்கு தேவையான வணிக மேம்பாட்டு சேவைகளை வழங்குதல், போன்ற பணிகள் மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து 11 மகளிர் குழுவை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளும், 2 மகளிர் சுயவுதவி குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தொழில் முதலீட்டு கடனுதவியும், 10 தொழில் முனைவோர்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான அங்கீகார சான்றிதழ் என மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நீடாமங்கலம் ஒன்றிய சேர்மன் சோம.செந்தமிழ்செல்வன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல் அலுவலர் செல்வம், வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×