என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் மன்ற தலைவியின் கணவர் தற்கொலை
- கடத்தூரில் பாவை மகளிர் மன்றம் மற்றும் அலுவலகம் நடத்தி வந்துள்ளார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரகு இறந்துவிட்டார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் சுமதி. இவர் கடத்தூரில் பாவை மகளிர் மன்றம் மற்றும் அலுவலகம் நடத்தி வந்துள்ளார்.
இவருடன் சேர்ந்து இவரது கணவர் ரகு (வயது 50) என்பவரும் சுய உதவிக்குழுக்களுக்கு லோன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகின்றது.
ஒரு குழுவுக்கு நான்கு லட்சம் லோன் வாங்கி கொடுத்தால், அவருக்கு 8,000 ரூபாய் கமிஷன் பெற்றுள்ளார். ரகு வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் தொகையில் 40 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதாக கடந்த 29.11.2022 அன்று ரகு வீட்டில் இருந்தபோது வங்கி ஊழியர் 5 பேரும், ஊர் பொதுமக்கள் 5 பேரும் கடன் தொகையை கேட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ரகு குடித்துவிட்டு மயங்கினார்.
அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரகு இறந்துவிட்டார்.
இது குறித்து அவரது மனைவி சுமதி அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






