search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் ரெயிலில் நகையை கொள்ளையடித்த  பெண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை
    X

    ஓடும் ரெயிலில் நகையை கொள்ளையடித்த பெண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

    • அமர்ந்து இருந்த இருக்கை எதிரே 3 பெண்கள் ஏறி அமர்ந்தனர்.
    • 3 பெண்களையும் விசா ரித்ததில் ஒடும் ரெயிலில் வள்ளி வினோதினியிடம் கொள்ளையில் ஈடுபட்டது.

    தருமபுரி,

    கடந்த 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூரை சேர்ந்த வள்ளி வினோதினி (வயது25). அவரது கணவர் சுந்தரவடிவேல் மற்றும் குழந்தைகளுடன் திருப்பத்தூரில் இருந்து பயணம் மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் மதுரை ரெயில்வே நிலையம் வந்தபோது அவர்கள் அமர்ந்து இருந்த இருக்கை எதிரே 3 பெண்கள் ஏறி அமர்ந்தனர். பிறகு அவர்கள் சேலத்தில் இறங்கி சென்று விட்டனர். இந்த நிலையில் சேலம் ரெயில்வே நிலையத்தை கடந்த சில நிமிடங்களில் வள்ளி விநோதனி தான் பையில் வைத்திருந்த 9 பவுன் நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தருமபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த அன்பு என்பவர் மனைவி வெண்ணிலா(48) ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் லெட்சுமிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி கவிதா(28), அதே பகுதியைச் சேர்ந்த சத்யா(26) ஆகிய 3 பெண்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடும் ரெயில் வள்ளி வினோதினியிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தருமபுரி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று குற்றவியல் நீதிபதி 3 பெண்களுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×