search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் உரிமை தொகை கேட்டு திரண்ட பெண்கள்
    X

    மாமல்லபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் உரிமை தொகை கேட்டு திரண்ட பெண்கள்

    • ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது.
    • அதிகாரிகளிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா பங்கேற்றார். ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது. பின்னர் வந்திருந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப் பட்ட ஏராளமான பெண்கள் திடீரென கிராம சபை கூட் டம் நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரி களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×