என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா
    X

    ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டும் ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தலையில் காந்தி குல்லா அணிந்து வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×