என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் அருகே கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்த பெண் கைது
- ரூ.5 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.30 ஆயிரம் வாங்கி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
- நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி , தெத்துப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கரியமாலா. தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்த நினைத்தார்.அதற்கு போதிய பணம் இல்லாததால், வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து திண்டுக்கல் தொழிற்பேட்டையில் விசாரிக்க சென்றார். அப்போது திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துபாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் அலுவலகம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் முத்துபாண்டியம்மாள் மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகளில் பழக்கம் உள்ளது.ஆகவே வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி, கரியமாலாவிடம் ரூ.30 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் காரியமலாவுக்கு வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள செக் பெற்றுக் கொண்டு தராமல் ஏமாற்றியுள்ளார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த கரியமாலா திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முப்பிடாரி வழக்குப்பதிவு செய்து முத்துபாண்டியம்மாளை கைது செய்தனர்.