என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகளுடன் புதிய செயலாளர் பழனியப்பன் ஆலோசனை
- மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனி யப்பன் சந்தித்தார்.
- கட்சி வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடத்தூர் ஒன்றியத்தில் உள்ள ரேகடஹள்ளி,மோட்டாங்குறிச்சி,சுங்கரஹள்ளி,சில்லாரஹள்ளி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் உள்ள அக்கட்சியின் நிர்வாகிகளை புதிதாக நியமிக்கப்பட்ட தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனி யப்பன் சந்தித்தார்.
தொடர்ந்து கட்சிக் கொடியுற்றி ,நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கடத்தூரில், கடத்தூர் பேரூர் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






