என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அருவங்காடு அருகே நடுரோட்டில் நின்ற காட்டு மாடுகள்
    X

    குன்னூர் அருவங்காடு அருகே நடுரோட்டில் நின்ற காட்டு மாடுகள்

    • 2 மாடுகள் ஆக்ரோஷத்துடன் அரசு பஸ் நோக்கி வந்தன.
    • சுமார் அரை மணி நேரம் திரிந்த காட்டு மாடுகள், ஒருவழியாக காட்டுக்குள் சென்று மறைந்தன.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் அருவங்காடு அடுத்த கொலக்கம்பை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு மாடுகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூர் நோக்கி சென்றது. அப்போது கிளிஞ்சடா-குன்னூர் சாலையில், 5 காட்டு மாடுகள் நடுரோட்டில் நின்றன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதற்கிடையே 2 மாடுகள் ஆக்ரோஷத்துடன் அரசு பஸ் நோக்கி வந்தன. எனவே டிரைவர் வண்டியை பின்னோக்கி எடுத்தார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்தனர்.

    கிளிஞ்சடா-குன்னூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் திரிந்த காட்டு மாடுகள், ஒருவழியாக காட்டுக்குள் சென்று மறைந்தன. பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.

    Next Story
    ×