என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
விபத்தில் கணவன் கண்முன் மனைவி பலி
- திருமணமான 5 மாதத்தில் விபத்தில் இளம்பெண் பலியானார்.
- தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
வேடசந்தூர் அருகில் உள்ள குட்டம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் மனைவி கவுசல்யா(23). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. நேற்றிரவு கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பைக்கில் பிரேக் போட்டபோது நிலைதடுமாறி கவுசல்யா கீழே விழுந்தார். படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






