search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி, தலைவாசல், வீரகனூர், கரிய கோவில், எடப்பாடி, ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    62.60 மி.மீ மழை பதிவு

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவாசலில் அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தலைவாசல் - 16 மி.மீ, வீரகனூர் - 9, சங்ககிரி - 7.4, தம்மம்பட்டி - 6, ஏற்காடு - 5, கரியகோவில் - 4, பெத்தநாயக்கன் பாளையம் - 3, ஆத்தூர்-2.4, கெங்கவல்லி- 2.2, ஓமலூர்- 2, எடப்பாடி- 2, ஆணைமடுவு - 2 சேலம்-1.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 62.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, காக்காவேரி உள்பட பல பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென மழை பெய்தது. மதியம் 3 மணிக்கு தொடங்கிய மழை, மாலை 5 மணி வரை பெய்து கொண்டிருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலையும் நாமக்கல் நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாரல் மழையால், நாமக்கல் நகரில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    வியாபாரிகள் பாதிப்பு

    பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, ஓலப்பாளையம், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், இருக்கூர், பெரியசோளிபாளையம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லிகோவில், கொத்தமங்கலம், குரும்பல மகாதேவி, ஜமீன்எளம்பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், கூடச்சேரி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் 12 மணி முதல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    பின்னர் வேகமாக பெய்ய தொடங்கிய மழை, விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலைகளில்

    வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை யோரம் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். திடீரென மழை பெய்ததால், இருசக்கர வாகனங்கள், நடந்து செல்வோர் நனைந்தபடியே சென்றனர்.

    Next Story
    ×