என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரியில் பரவலாக பெய்த மழை
  X

  தருமபுரியில் பரவலாக பெய்த மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது
  • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்துள்ளது.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

  இந்த நிலையில் தருமபுரி நகர் பகுதியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலையில் மழை தூரல் பெய்தது. நேரம் செல்ல செல்ல காற்று பயங்கரமாக வீசியது. அந்த காற்றுடன் பரவலாக மழை கொட்டியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  இந்த மழை தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாரதிபுரம், இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்பட பல இடங்களில் பரவலாக பெய்துள்ளது.

  மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது. நேற்று பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்துள்ளது.

  Next Story
  ×