என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் :  கழிவறைக்கு சென்று ஆசிட்டை குடித்த விவசாயி  -  தளி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு
    X

    விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் : கழிவறைக்கு சென்று ஆசிட்டை குடித்த விவசாயி - தளி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு

    • எதற்காக இங்கிருந்து மண் அள்ளுகிறாய் என்று ராஜா கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரமேஷ் ரெட்டி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள கோவில் நிலத்தில் ரமேஷ் ரெட்டி என்பவர் மண் அள்ளி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

    எதற்காக இங்கிருந்து மண் அள்ளுகிறாய் என்று ராஜா கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம்

    அடைந்த ரமேஷ் ரெட்டி ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த ராஜா தந்த புகாரின்பேரில் தளி போலீசார் ரமேஷ் ரெட்டியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரமேஷ் ரெட்டி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.

    போலீசார் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×