என் மலர்
உள்ளூர் செய்திகள்
மருத்துவ படிப்பிற்கு பிலிப்பைன்ஸ் செல்லும் 131 மாணவர்களுக்கு ஒயிட்கோட் வழங்கும் விழா
- ஒயிட்கோட் வழங்கி, மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் விழா அகாடமி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.
- பாரத் இன்ஸ்டிடியூட் உயர் கல்வி தேர்வு குழு இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிகல் அகாடமியில் படித்த 131 மாணவ-மாணவிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டாக்டர் படிப்பிற்காக செல்கிறார்கள். இவர்களுக்கு அகாடமி தலைவர் டாக்டர் டேவிட் கே.பிள்ளை தலைமையில் ஒயிட்கோட் வழங்கி, மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் விழா அகாடமி வளாக அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பாரத் இன்ஸ்டிடியூட் உயர் கல்வி தேர்வு குழு இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு குறித்து முன்னுரை விளக்கமளித்தார். இந்திரா கே.பிள்ளை, கெவின் கே.பிள்ளை, சி.கே.சி.பால், ஜெசினிதா கே.பிள்ளை, ரபியா பானு ஆகியோர் முன்னிலையில் பிலிப்பைன்ஸ் செல்லும் மருத்துவ படிப்பு மாணவர்கள் அனைவரும் நன்னடத்தை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அகாடமியின் பங்குதாரர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








