search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    • தொழிலாளர் நல வாரிய பதிவில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர்.
    • பகுதிபகுதியாக ஆவணங்களை கேட்டு இழுத்தடிக்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    உடுமலை :

    அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.

    தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) ராஜகுமார், வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), வணிகர் சங்கங்கள், ஓட்டல் உரிமையாளர் சங்கம் என, பல்வேறுவகை தொழில்முனைவோர் சங்கங்களின் பிரதிநிதிகள், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நல வாரிய பதிவில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 14ந் தேதி வரை, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த 389 பேர், உடல் உழைப்பு தொழிலாளர் 1224 பேர், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்க்கும் நல வாரியத்தை சேர்ந்த 37 பேர் என மொத்தம் 1,650 பென்ஷன் கோரும் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நலவாரியத்தில் பதிவு செய்து திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப நிலை விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகள் கிடைக்கச் செய்யவேண்டும். போதிய ஆவணங்கள் இணைக்கப்படாதபட்சத்தில் எந்தெந்த ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும் என்கிற முழு விபரத்தையும் மனுதாரருக்கு முதலிலேயே தெளிவாக தெரியப்படுத்திவிடவேண்டும். பகுதிபகுதியாக ஆவணங்களை கேட்டு இழுத்தடிக்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×