என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
    X

    நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    திரவியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

    • மாணவிகளுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும் வகையில் கல்வி ஒன்றே குறிக்கோள் என்பதை பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டி பேசினார்.
    • கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு ஆணையினை வழங்கினார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள திரவியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ், செயலாளர் ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் விசும்பி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும் வகையில் கல்வி ஒன்றே குறிக்கோள் என்பதை பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டி பேசினார். மேலும் கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு ஆணையினை வழங்கினார்.

    Next Story
    ×