search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20ஆண்டுகளுக்கு பின்பு களைகட்டியது:    கடத்தூரில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
    X

    கடத்தூர் பள்ளியில் கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட கால்பந்து அணியினர் மற்றும் பயிற்சியாளர்களை படத்தில் காணலாம்.

    20ஆண்டுகளுக்கு பின்பு களைகட்டியது: கடத்தூரில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

    • சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு கடத்தூர் பள்ளியில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி திருவிழா போன்று இருந்தது.
    • மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர் .

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டன.

    இதில் வாலிபால், புட்பால், கோ-கோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது .போட்டிகளில் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    இந்த போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில் கபடி, கால்பந்து, கைபந்து போட்டிகளில் பல வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன . கோ- கோ போட்டியில் ஸ்டான்லி பள்ளியும், பெண்களுக்கான கால்பந்து போட்டியில் பொ.மல்லாபுரம்,பள்ளியும், டெணிகாய்ட் போட்டியில் தனிநபர் போட்டியில் ஸ்டான்லி பள்ளியும், இரட்டையர் பிரிவில் புட்டிரெட்டிப்பட்டி அரசு பள்ளியும் வெற்றி பெற்றது. ஜூனியர், சீனியர் பிரிவுகளுக்கான போட்டிகளும் தனித்தனியே நடைபெற்றது.

    சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு கடத்தூர் பள்ளியில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி திருவிழா போன்று இருந்தது. மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டிகளை கண்டு ரசித்தனர் .

    போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கடத்தூர் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். வட்டார உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளுக்கான நடுவர்களாக இருந்து நடத்தினர்.

    Next Story
    ×