என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் கலெக்டர் நடைபயிற்சி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து அவரும் நடந்து சென்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயிற்சி விழிப்புணர்வு
- நடைபயிற்சி செய்பவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
- நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமரவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், மாவட்ட பொது சுகாதார துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி இன்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து அவரும் நடந்து சென்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் தொகுதி எம்பி க. செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழில ரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மற்றும் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் மற்றும் பொதுமக்கள், நடைபயிற்சி செய்பவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமரவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் வரை சென்று நிறைவடைந்தது.






