search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடக்க வாய்ப்பு இல்லை: வி.கே.சிங்
    X

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடக்க வாய்ப்பு இல்லை: வி.கே.சிங்

    • வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஓச்சம்பட்டியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்துகொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். இத்திட்டத்தில் மோசடி நடக்க வாய்ப்பு இல்லை. இத்திட்டத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருச்சியில் விமான முனையம் கட்டுமான பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி வருகிறது. கூட்டம் நடத்தக்கூடிய இடமானது பார்க்க வேண்டிய நல்ல இடம் அவ்வளவுதான்.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கி சாலைகளை மத்திய அரசே அமைத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×