என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    ரோபோடிக்ஸ் நிறுவனத்துடன் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    • நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ரோபோடிக்ஸ் நிறுவனமான ''மேட் ஆட்டோமேசன்'' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இதில் பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, மேட் ஆட்டோமேசன் நிர்வாக இயக்குநர் பிரவீன் மேத்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் கல்லூரியில் உள்ள ரோபோடிக்ஸ் ஆய்வு கூடத்தை புதிய தொழில்நுட்பம் மூலம் விரிவாக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் இந்த துறையில் வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி கொள்ள முடியும்.

    நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தொடக்க உரையாற்றினார். டீன் மாரிசாமி சிறப்புரையாற்றினார். மின்னனுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் பேசுகையில், ரோபோக்கள் பற்றியும், பல்வேறு துறைகளில் ரோபோக்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மருத்துவம், பெயிண்டிங், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வு, விவசாயி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பற்றி எடுத்துரைத்தார்.மேலும் மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் ரோபோ பற்றியும், அதன் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னனுவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மீனா பிரகாஷ், ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் தனம், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×