என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொறுப்பு சேர்மனா? புதிய சேர்மனா? இன்று பலப்பரீட்சை
    X

    பொறுப்பு சேர்மனா? புதிய சேர்மனா? இன்று பலப்பரீட்சை

    • பொறுப்பு சேர்மனா? புதிய சேர்மனா? இன்று பலப்பரீட்சை நடந்தது.
    • 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அதில் 2-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரான கலாவதி சந்திரன் மற்றும் 11 வார்டு கவுன்சிலரான பஞ்சவர்ணம் ஆகியோரை தவிர மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத் துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இந்த நிலையில் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பு நடந்தது குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம் தரப்பிலும் விளக்கம் கேட்கப்பட்டது.இதனையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் இரு தரப்பினரின் விளக்கத்தையும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கு விரிவான அறிக்கையாக அனுப்பி வைத்தார்.

    இதனையடுத்து இந்த அறிக்கையினை பரிசீலனை செய்த ஊரக வளர்ச்சித் துறை செயலர் நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பின் படி நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.மேலும் இந்த நடவடிக்கையானது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறாமல் நரிக்குடி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் பகுதிக்கு மேல் அதாவது 8 கவுன்சிலர்கள் கலந்து கொண்டால் மட்டுமே சேர்மன் தேர்தல் நடைபெறு மென கூறப்படும் நிலை யிலும் தற்போது நரிக்குடி ஒன்றிய பொறுப்பு சேர்ம னாக அ.தி.மு.க.வை சேர்ந்த அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பதவி வகித்து வரும் சூழ்நிலையிலும் அ.தி.மு.க. தரப்பில் 8 கவுன்சிலர்களும், திமுக தரப்பில் 6 கவுன்சிலர்களும் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நம்பிக்கை யில்லா மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உட்பட 12 கவுன்சிலர்களும் அப்போ தைய சேர்மன் அ.தி.மு.க. சேர்மனாக இருந்த பஞ்சவர்ணத்திற்கு எதிராக வாக்களித்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

    நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி ஆதி திராவிடர் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள ஒன்றிய சேர்மன் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தது.

    இந்நிலையில் 8 கவுன்சிலர்கள் இருந்தால் சேர்மன் தேர்தல் நடை பெறும் என்ற சூழ்நிலையில் தற்போது தி.மு.க. தரப்பில் 6 கவுன்சிலர்கள் ஆதரவாக இருந்து வரும் நிலையில் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க. கவுன் சிலர்களும் நடைபெறவுள்ள சேர்மன் தேர்தலில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் சேர்மன் தேர்தல் நடைபெற 8 பேர் வேண்டுமென்ற விதி நிறை வேறியுள்ளதாக கருதப்படு கிறது.

    ஆனால் தேர்தல் நாளான இன்று நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிவரை யாரும் வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. பொறுப்பு சேர்மன் தொடர் வாரா? அல்லது சேர்மன் தேர்தல் நடை பெற்று தி.மு.க. தரப்பில் புதிய சேர்மன் பொறுப் பேற் பாரா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்குலையாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 100- க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×