search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து போலீசார் அந்த சிலையை வைக்க அனுமதி இல்லை எனக்கூறி துணி மற்றும் தகரத்தால் மறைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அமச்சியார்பட்டியில் அனுமதியின்றி இமானு வேல் சேகரன் சிலை வைக்கப்பட்டது. இதை யடுத்து போலீசார் அந்த சிலையை வைக்க அனுமதி இல்லை எனக்கூறி துணி மற்றும் தகரத்தால் மறைத்தனர்.

    இந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் குறிப்பிட்ட பகுதியில் இமானுவேல் சேகரன் சிலை வைப்பதால் ஜாதி பிரச்சினை ஏற்படாது. கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனு அளித்தோம். செப்டம்பர் 10-ந் தேதி வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை மூடி மறைத்து வைத்துள்ளனர். எனவே சிலையை திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் குறிப்பிட்ட பகுதியில் பிற சமூகத்தினர் செல்லும் பாதையில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அந்தப்ப குதியில் ஜாதி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே முறையாக அனுமதி பெற்று சிலையை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதி தனது உத்தரவில், சிலையை வைக்க மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனு நிலுவையில் உள்ளது. எனவே முதல்-அமைச்சர்,மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்று சிலையை வைக்க வேண்டும். வருகிற 19-ந் தேதிக்குள் அங்கு வைக்கப்பட்டுள்ள இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    Next Story
    ×