என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
  X

  ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • இந்த பேரணியில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

  சிவகாசி

  சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றம் சார்பில் கல்லூரி வளாகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் கட்டாய ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புனர்வை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதை முதல்வர் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாலை விபத்துக்களைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி அறிவுறுத்தினார். இந்த பேரணியில் 32 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×