search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி, செங்கோட்டையில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம்
    X

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள வெற்றி விநாயகர் சிலையை படத்தில் காணலாம்.

    தென்காசி, செங்கோட்டையில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம்

    • செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஊர்வலம் வரும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வ லங்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    37 விநாயகர் சிலைகள்

    கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை முறையே பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம் காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வவிநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே. தெரு, மேலூர் அப்பா மாடசாமி, பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஓம்காளி திடலில் இருந்து புறப்பட்டு வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலக முக்கு, மேலூர், பெரிய பள்ளிவாசல் வழியாக மேலபஜார், பூதத்தார் கோவில், காசுகடை பஜார், கீழ பஜார், காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செங்கோட்டை குண்டாறு அணை பகுதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்புடன் விஜர்சனம்

    விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்காக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 65 சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிராக்கள் மூலமாகவும் ஊர்வலம் செல்லும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து குண்டாற்றில் அவை விஜர்சனம் செய்யபடுகிறது.

    கிராமப்புற சிலைகள்

    செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம், பிரானூர், தேன்பொத்தை ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் வழிபாடுகளுக்கு பின் விஜர்சனம் செய்யபடுகிறது. புளியரை, கேசவபுரம், லாலா குடியிருப்பில், தெற்கு தெரு மற்றும் வடக்குதெரு ஆகிய 5 இடங்களிலும், பண்பொழியில் தைக்கா தெரு, தெற்கு தெரு, தெற்கு ரதவீதி, பேட்டை தெரு, தர்மர் கோவில், அரசமர தெரு, திட்டு தெரு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அரிகரா நதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    இதேபோன்று தென்காசி யில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    கடையநல்லூரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளது. மேல கடையநல்லூர் கண்ணார் தெரு, கிருஷ்ணா புரத்தில் மகாராஜ கணபதி, மறுகால் தெரு, வடக்குவா செல்வி அம்மன் கோவில், மாவடிக்கால், முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளது. புளியங்குடியில் 35 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளது.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 222 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 5 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. மாநகரில் 76 இடங்களில் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற 24-ந்தேதி கரைக்கப்படுகிறது.

    இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசாரும், மாநகரில் 500 போலீசாரும் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். களக்காட்டில் தோப்புத்தெரு, சாலை புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி பகுதியில் 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரபுரம், மூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் 15 இடங்களிலும், இடையன்குளம், கீழ உப்பூரணி, மஞ்சவிளை, பத்மநேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களிலும் என மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உவரி கடல், பாபநாசம் தாமிரபரணி ஆறுகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    உடன்குடி சீர்காட்சி, தைக்கா ஊர், பரமன்குறிச்சி, வட்டன்விளை, விஜய நாராயணபுரம், முத்து கிருஷ்ணாபுரம், அம்மன்புரம், முருகேசபுரம், குலசேக ரன்பட்டினம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, அரசர் பேட்டை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×