search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கிராமமக்கள் வலியுறுத்தல்
    X

    மின்விரிவாக்க பணிக்காக போடப்பட்ட மின்கம்பம்.

    மின் விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கிராமமக்கள் வலியுறுத்தல்

    • மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
    • மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர்தெரு பகுதியில் உள்ள ஆலமரம் அருகே மின்கம்பிகள் மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    அதேபோல வையாபுரி தோப்பு பகுதியில் மரங்கள் அடர்ந்த தோப்பு வழியாக மின்கம்பிகள் செல்வதாலும், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குடியிருப்பு வீடுகளுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாலும் மின் கம்பிகளால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராமமக்கள் இருந்து வருகின்றனர்.

    மின்பாதையை மாற்றி அமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சோழன் வாயிலாக மின்வாரியத்திடம் கிராமமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடுவதற்கு மின்கம்பம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு பணியும் நடை பெற வில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு மின் வாரியம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கிராமமக்கள் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது:-

    ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பு குடியிருப்பு பகுதியில் அதிகளவில் மின்கம்பிகள் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    பலத்த காற்று அடிக்கும் சமயத்தில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின் கம்பிகள் அறுத்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் மின்சாரம் இல்லாமல் பல நாட்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக நடவடி க்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×