search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாங்குளம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரியை மூட வலியுறுத்தி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
    X

    கல்குவாரியை மூட கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.

    பூலாங்குளம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரியை மூட வலியுறுத்தி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

    • கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது பள்ளியின் கட்டிடங்கள் குலுங்குவதால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
    • பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் கூறுகின்றனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பூலாங்குளம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருவதாகவும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது அப்பகுதியில் உள்ள பள்ளியின் கட்டிடங்கள் அதிகளவில் குலுங்குவதால் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.

    பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் ஆண்டிபட்டி கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் இதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.

    எனவே இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு ஆண்டிபட்டி அருகே செயல்பட்டுவரும் கல்குவாரி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஆண்டிபட்டி மற்றும் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மனு அளித்தனர்.

    Next Story
    ×