என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு:   அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி,

    அ.தி.மு.க., பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவா ளர்கள் நேற்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று காலை கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றியக் குழுத்தலைவர் அம்சா ராஜன், நகர செயலாளர் கேசவன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×