என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி பேசிய காட்சி.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மார்பக பரிசோதனை அவசியம்
- வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேச்சு
- கவிதை, நாடகம், கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தன
வேலூர்:
வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் உலக மார்பக புற்றுநோய் மாதம் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
இதை முன்னிட்டு விழிப்புணர்வு பதாகை ஏந்திய முழக் கங்கள், பேரணி, விழிப்புணர்வு கவிதை, நாடகம், கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடந்தன. இதன் இறுதி விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், மருத்துவ துணை கண் காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தலைமை தாங்கி பேசியதாவது:-
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 6 மாதம் அல்லது ஓராண்டுக்கு ஒரு முறையாவது மார்பக பரிசோதனை செய் துக்கொள்ள வேண்டும். மார்பகங்களில் வலி, கட்டி, நிறம் மாறுதல், அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக டாக் டர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதில், யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ, தயங்கவோ தேவையில்லை.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். முற்றிய நிலையில் இருந்தால் குணப்ப டுத்துவதில் சிக்கல் ஏற்படும்.
நவீன கருவிகளின் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் மார்பக புற்றுநோயை நுண் கதிர்வீச்சு, கீமோ தெரபி மற்றும் மார்பக கன்சர்வேட்டிவ் அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சர் கட்டியை அகற்றலாம். பொது மக்கள் அனைவரும் இதை பயன்படுத் திக் கொண்டு மார்பக புற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், துறை தலைவர்கள் ராஜவேலு, லோக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






