என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி பலியானவரின் படம்.
வேலூர் தியேட்டர் ஊழியர் நீரில் மூழ்கி பலி
- அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- நண்பர்கள் கண்முன்னே பரிதாபம்.
வேலூர்:
வேலுார் அருகே உள்ள அமிர்தி சிறு வன உயி ரியியல் பூங்கா அருகே வனப்பகுதியில் அமிர்தி அருவி அமைந்துள்ளது. மிகவும் ஆபத்தான இங்கு ஏற்கனவே பலர் பலியாகி யுள்ளனர்.
இதனால், அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு யாரும் செல்லாத வகையில் வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருயில் குளித்த நபர்கள்
வேலுார் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த முக்தர்சி (வயது 21), கிஷோர் (19), விருபாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (19), ஆதிஷ் (17), சூர்யா (18) இவர்கள் விருதம்பட்டு பாக ஆற்றங்கரையோரம் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வருகின்றனர்.
5 பேரும் நண்பர்கள்.இவர்கள் அமிர்தி பூங்காவுக்கு நேற்று மாலை பைக்கில் சென்றனர். பைக்கை அங்கு நிறுத்தி விட்டு, பூங்காவில் உள்ள வனவிலங்குகளை சுற்றிப் பார்த்து ரசித்தன. அப்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் வனப்பகுதியில் உள்ள அருவிக்கு செல்ல முடிவு செய்தனர். பூங்காவின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் பூங்காவை ஒட்டி உள்ள ஆற்றில் இறங்கி அந்த ஆற்றின் வழியாகவே அருவிக்கு நடந்து சென்றனர். தொடர்ந்து, 5 பேரும் அருவியில் உற்சா கமாக குளித்துள்ளனர்.
அதன்பிறகு, அருவியின் மேல்பகுதியில் நின்றப டியே 5 பேரும் சேர்ந்து ' செல்பி ' எடுத்தனர். அப்போது, எதிர்பாராதவி தமாக கால் வழுக்கியதில் முக்தர்சி அருவியில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதைக்கண்டு திடுக்கிட்ட அவரது நண்பர்கள் அவரை காப் பாற்ற முயன்றனர்.
இதில் யாருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிய வாலிபரை மீட்க முடியாமல் தவித்தனர்.மேலும் அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அனைவரது பேண்டையும் கயிறு போல கட்டி தண்ணீரில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் புதைசேற்றில் மூழ்கிய வாலிபர் முக்தர்சி பரிதாபமாக இறந்தார்.
இதனால் கதறி துடித்த நண்பர்கள் 4 பேரும், அமிர்தி வனச்சரக அலுவலகத்துக்கு வந்து நடந்த சம்பவத்தை கூறி அழுதனர். இதையடுத்து, வனச்ச ரகர் முருகன், வனவர் ரவீந்திரன் மற்றும் வனத் துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று, நீரில் குதித்து முக்தர்சி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து ஜமுனா மரத்தூர் போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில், போளூர் டி.எஸ்.பி.குமார் அங்கு சென்று விசா ரணை மேற் கொண்டார். தொடர்ந்து, முக்தர்சி உடலை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக வேலுார் அடுக் கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர்.
மேலும், இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமிர்தி அருவிப் பகுதியில் ஆழமான பள்ளங்கள் சேரும் சகதியுமாக உள்ளன இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி யாரும் அருவிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறை யினர் அறிவுறுத்தி உள்ளனர்.






