என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிருஷ்டி மெட்ரிக் பள்ளியில் உத்சவ் விழா
- கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
சிருஷ்டி மெட்ரிக் பள்ளியில் உத்சவ் விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ மகாதேவன் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிருஷ்டி பள்ளியின் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் திங்கள் ஜான்சன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் இன்றைய கால நிலையில் தொலைபேசியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், ஆன்லைன் ஆன்லைன் விளையாட்டுகளால் இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் இயல், இசை, நாடக நிகழ்ச்சி களால் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நமது உள்ளுணர்வை வளர்ப்பது குறித்து ஸ்ரீ ரவி சங்கர் வித்யா மந்திர் அறக்கட்டளை பிரதிநிதிகள் தெள்ளத் தெளிவாக செயல்படுத்தி காட்டியது பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
முடிவில் மாணவி நவிலா நன்றி கூறினார்.






