என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவம்பாடி முள்கத்தரிக்காய் ஏற்றுமதிக்கு பயிற்சி
- விவசாயிகள் வலியுறுத்தல்
- 300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடியாகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவராஜபாளையம், காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான முள் கத்திரிக்காய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
அதிக சுவை கொண்ட இந்த முள் கத்தரிக்காயை பல்வேறு தரப்பினரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
முள் கத்திரிக்காயில் புரதம், வைட்டமின்-சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்களும் மிகுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 300 ஹெக்டேர் பரப்பளவில் முள் கத்திரிக்காய் சாகுபடியாகிறது.
45 முதல் 60 நாளில் மகசூலுக்கு தயாராகும் இந்த முள் கத்திரிக்காய் செடியில் தொடர்ந்து 5 மாதங்கள் வரை மகசூல் பெற முடியும். இதன்மூலம், ஓர் ஏக்கருக்கு 16 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் முள் கத்திரிக்காய் சாகுபடியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வறட்சி, நோய்களை தாங்கி விளையக்கூடிய இந்த முள் கத்தரியில் சாம்பார், பொரியல், தொக்கு, வற்றல் உள்ளிட்டவற்றை சமைக்க முடியும். முள் கத்தரிக்காய் பஜ்ஜியின் சுவையும் அதிகம்.
அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட முள் கத்தரி வகையில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு தனிச்சிறப்பு உண்டு. இலவம்பாடி முள் கத்திரியின் நிறம், சுவை, எடை உள்ளிட்டவை தனி ரகம் என்றே கூறலாம். வேறு எந்த மாவட்டத்திலும் இலவம்பாடி முள் கத்திரிக்காய் விளைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கட்டு வட்டத்தில் இலவம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் பெரியளவில் விளைவிக்கப்படுகிறது.
அந்த வகையில் தனிச்சிறப்பு கொண்ட இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. சென்னை கோயம்பேடு, பெங்களூரு உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு மிகுநத வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலங்க ளுக்கு ஏற்றுமதி புவிசார் கிடைத்த பிறகு வியாபாரிகள் சிலர் கிராமத்துக்கே நேரடியாக வந்து முள்கத்திரிக்காய்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், விவசாயி களுக்கு கூடுதல் செலவும், நேரமும் மிச்சமாகிறது. இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு அதிக ரித்துள்ள மவுசு காரணமாக சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து இலவம்பாடி முள் கத்திரிக்காய் அண்டை மாநிலங்களுக்கும்வி ற்பனைக்காக அனுப்பப்படு கின்றன. இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருப்பதால் அதுகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.
கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி பயிற்சி அளித்தாலும் நல்லதுதான். விவசா யிகளுக்கும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது" என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






