என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தீயில் கருகி பலி
- போலீசார் விசாரணை
- அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூரில் சோகம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் ஒட்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவரின் மகள் லட்சுமி(20), இவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த லட்சுமி டீ போடுவதற்காக சமையலறையில் கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக லட்சுமி மீது தீப்பொறி விழுந்து தீ மளமளவென பற்றியுள்ளது.
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், லட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சக்கரவர்த்தி வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






