என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
    X

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்த காட்சி.

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

    • ரூ.11.50 லட்சம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி கிடைத்தது
    • பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை செலுத்துகின்றனர்

    அணைக்கட்டு:

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் சயெ்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இந்நிலையில், நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வாளர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    இதில், பக்தர்கள் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வ லர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×