என் மலர்
உள்ளூர் செய்திகள்

குலதெய்வ வழிபாட்டிற்காக வளர்த்த பன்றியை வேட்டையாடிய கும்பல்
- துப்பாக்கியால் சுட்டு தூக்கி சென்றனர்
- மேய்ச்சலுக்காக சென்றது வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த குச்சி பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் குலதெய்வ வழிபாட்டிற்காக கடந்த 2 ஆண்டுகளாக பன்றி ஒன்றை வளர்த்து வருகிறார்.
பன்றியை தினமும் காலை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மாலை கயிற்றால் கட்டி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பன்றியை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டார். வெகு நேரமாகியும் பன்றி மாலையில் வீடு திரும்பவில்லை.
அதனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது பன்றியை சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்று அதனை எடுத்துச் சென்றதாக கூறினர். சந்தேகம் அடைந்த மணி தனது உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது பன்றியை கொன்றதற்கான தடயம் இருந்தது.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் மணி புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






