என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டுமனை பட்டா அளந்து கொடுக்க வேண்டும்
- கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது
வேலூர்:
காட்பாடி அடுத்த வீரபத்திரபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த 42 பேரின் வீட்டுமனை பட்டா ஜாப்ரா பேட்டையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு தற்காலிக பட்டா வழங்கிய நபர் தற்போது அந்த இடத்தை கொடுக்க மறுக்கிறார்.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது.
எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.
Next Story






