search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைவாழ் மக்களின் 50 ஆண்டுகால கனவு நினைவானது
    X

     நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கியபோது எடுத்தபடம்.

    மலைவாழ் மக்களின் 50 ஆண்டுகால கனவு நினைவானது

    • பீஞ்சமந்தை மலைக்கு பஸ் இயக்கப்படும்
    • அமைச்சர் துரைமுருகன் தகவல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்திற்க்கு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை சாலை வசதி இல்லை.

    இதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் 35 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டதோடு, உயிரிழப்புகளும் நடந்தது.

    இதனால் தங்கள் மலை கிராமங்களுக்கு முறையான தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி முதல் கட்டமாக முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை 6.4 கிலோ மீட்டர் தொலைவு ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக தார்சாலை அமைக்கப்பட்டது.

    இதனை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், அணைகட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ரிப்பன்வெட்டி துவக்கி வைத்தனர்.

    இதனையடுத்து தொடர்ந்து பீஞ்சமந்தை மலை மீது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

    இதில் மலைவாழ் மக்கள் சுயதொழில் தொடங்க நிதி உதவி, வீடு கட்ட ஆணை, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை என ரூ.9 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் பேசியதாவது:-

    பஸ் வசதி

    இந்த ஊருக்கு ரோடு போடுவது தண்ணிபட்ட பாடு. என்னமோ இந்த பாரஸ்டே இவங்களது மாறி வனத்துறையினர் பண்ணுறாங்க மந்திரி சொன்னா கூட கேட்க மாட்டேங்குறாங்க. கொஞ்ச நீக்கு போக்கோடு நடந்துகொள்ள வேண்டும்.

    பீஞ்சமந்தைக்கு தேவையான டவரை பாராளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டியது. கதிர் ஆனந்திடம் சொல்லி அமைத்துகொடுக்க சொல்கிறேன்.

    இந்த ஆட்சி வந்தபிறகு மலை வாழ் மக்களுக்கு பல திட்டங்களை செய்துள்ளோம்.

    நான் யூடியூப் பக்கம் போனால் மலைவாழ் மக்கள் வாழ்க்கையை தான் அதிகம் பார்ப்பேன். திம்மம் பாரஸ்ட், சந்தியமங்கலம் போன்ற இடங்களில் மக்கள் வாழ்வதை பார்பேன். அதில் பழங்குடி மக்கள் வாழ்க்கையை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மிருகத்தோடு மிருகமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

    பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு விரைவில் சோதனை ஓட்டம் முடிந்த பின்பு, மினி பஸ் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்,

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் சி.பாஸ்கரன், துணை பெருந்தலைவர் சித்ரா குமாரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் , துணைத் தலைவர் ரேணுகாதேவி, பீஞ்சமந்தை ஊராட்சி மன்றத் தலைவர் ரேகா ஆனந்தன், துணைத் தலைவர் கம்சலா சுந்தரேசன் வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×