என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி மேயரிடம் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க நிர்வாகிகள் மனு அளித்த காட்சி.
வேலூர் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க கட்டிடத்திற்கு வரி விலக்கு
- மாநகராட்சி மேயரிடம் நிர்வாகிகள் மனு
- மரக்கன்றுகள் வழங்கினர்
வேலூர்:
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சார்பில் சிறை அலுவலர் ஆர்.குணசேகரன் ஆகியோர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலக கட்டிடம் இயங்கி வருகிறது.
சிறையிலிருந்து விடுதலையான சிறைவாசிகளின் மேம்பாட்டிற்காக கட்டிடத்திலிருந்து வசூலிக்கப்படும் வாடகையானது தொண்டு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த கட்டிடத்திற்கு வேலூர் மாநகராட்சி வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுக்கு மரக்கன்றுகளை மேயர் சுஜாதா வழங்கினார்.






