என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகை
- குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.
- குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைச்செயலாளர் நிஜாமுத்தீன் அஸ்லம் தலைமையில் மாவட்ட பொருளாளர் கலீல், துணை அமைப்பாளர் நமீம், இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சத்துவாச்சாரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய நிர்வாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. அந்த பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் இது சம்மந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.






