என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மக்கான் சாலையில் முதியவர் விழுந்த கால்வாயில் தடுப்பு சுவர்
    X

    முதியவர் விழுந்த காட்சி (பழைய படம்). தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடப்பதை படத்தில் காணலாம்.

    வேலூர் மக்கான் சாலையில் முதியவர் விழுந்த கால்வாயில் தடுப்பு சுவர்

    • வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை
    • கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது


    வேலூர்,

    வேலூர் மக்கான் சிக்னல் அருகேயிருந்து புதிய பஸ் நிலையம் செல்லக்கூடிய சாலையின் இருபுறமும் கடைகளும், வணிக வளாகங்களும் அதிகமிருக்கின்றன.

    அருகிலேயே பழைய பஸ் நிலையம், சி.எம்.சி. மருத்துவமனை ஆகியவை இருப்பதாலும், இந்தப் பகுதி பரபரப்பாகவே காணப்படும்.

    அப்படிப்பட்ட சாலையையொட்டி நடை பாதை அமைக்கப்பட வில்லை. சாலையோ ரமிருக்கும் கழிவுநீர்க் கால்வாயும் தூர்வாரப்பட வில்லை.

    இதனால், கால்வாய் நிரம்பி, சாலையோரம் ஆங்காங்கே கழிவுநீர்க் குட்டைகளாக காட்சியளி க்கின்றன. கடை வைத்தி ருக்கும் வியாபாரிகள் பலரும் சாலைக்கும், கடைக்கும் இடைப்பட்ட கழிவுநீர்க் குட்டைகளை கடப்பதற்காக பெரிய பலகைகளைப் போட்டு வைத்திருக்கின்றனர்.

    சாலையோரம் ஆபத்தான முறையில் கழிவுநீர்க் கால்வாய் சிதில மடைந்து, கண்டு கொள்ளா மல் விடப்பட்டிருக்கிறது.

    அந்தப் பள்ளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட்டில் வந்த முதியவர் விழுந்தார். கால்வாய்க்குள் விழுந்த முதியவர் ஹெல்மட் அணிந்தி ருந்ததால், அவருக்கு பெரியளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    ஹெல்மட் அணியாமல் இருந்திருந்தால், அவர் படுகாயமடைந்திருப்பார்.

    மழைக்காலம் நெருங்குவதால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

    எனவே, மாநகராட்சி நிர்வாகம், இதுவரை மெத்தனமாக இருந்தது போதும். இனியாவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாயைச் சீரமைத்து, நடைபாதை அமைத்து, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து முதியவர் விழுந்த கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் இன்று தொடங்கியது.

    Next Story
    ×