என் மலர்
உள்ளூர் செய்திகள்

10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
- தென்னை மட்டை குவியலில் இருந்தது
- வனத்துறையினர் காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:-
ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் அருகே உள்ள மராட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றார்.
வீட்டின் முன்பு தென்னை மட்டை குவியல் போட்டு வைத்துள்ளார். அதில் நேற்று மாலை ஏதோ சத்தம் கேட்டுள்ளது அருகே சென்று பார்த்த போது அதில் மலைப்பாம்பு இருந்ததை கண்டு அலறி அடித்து ஒடினார். இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10 அடி நீளமுடைய மலை பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் வனச்சரகர் இந்து உத்தரவின் பேரில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு அருகில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.
Next Story






