என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மண்டலத்தில் 12 பழைய பஸ்கள் புதுப்பிக்கும் பணி
- மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டம்
வேலூர்:
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பயன்பாட்டில் இருந்து முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் இருந்த பஸ்கள் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டிருந்தது.
அதனுடன் பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பஸ்கள் நீலம் மற்றும் சில்வர் வண்ணத்தில் இருந்தவை ஆகும். வண்ணத்தில் மட்டுமின்றி உட்கட்ட மைப்பிலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் ரீடிங் விளக்குகள் தரம் உயர்த்தி வடிவ மைக்கப்பட்டுள்ளது.
ரெக்சீன்கள் கொண்டு இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளதால் இவை எளிதில் அழுக்கு அடைவது இல்லை. முழுக்க முழுக்க புதியதாக பஸ் பாடி கட்டப்பட்டுள்ளதால் பளிச்சென்று காணப்ப டுகிறது.
தனியார் பஸ்களுக்கு போட்டியாக வடிமைப்பும், தரமும் அமைந்துள்ளது. நீண்டதூர வழித்தடங்களில் இந்த பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் முதற்கட்டமாக 12 பழைய பஸ்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்னும் சில வாரங்களில் இப்பணி முழுமையாக முடிக்கப்படும். அதன்பிறகு இந்த பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






