என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் காந்தி ரோடு பாபு ராவ் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய போது எடுத்த படம்.
வேலூர் காந்தி ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் காந்தி ரோடு பாபு ராவ் தெரு பகுதிகளில் ஏராளமான லாட்ஜ் கடைகள் உள்ளன. இங்கு வெளி மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர்.
காந்தி ரோடு பாபு ராவ் தெரு பகுதிகளில் கால்வாய் நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் வைத்தனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பொக்லைன் எந்திரம் மூலம் கடை படிக்கட்டுகள் முகப்பு இடித்து அகற்றினர். 700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு அகற்றினார்கள்.
இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story