என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்கள்
- 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது
வேலூர்:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்களுடன் பல்வேறு திட்ட பணிகள் குறித்து இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
இநனையொட்டி கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அரசு அலுவலர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
முதல்அமைச்சர் வருகையை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டு இருந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர்.
கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
Next Story