என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் கோட்டை கொத்தளம், சிப்பாய் புரட்சி நினைவு தூண் ஓவியங்கள்
    X

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள மேம்பால சுவற்றில் வர்ணம் தீட்டப்படுவதால் புதுப்பொலிவு பெற்று வரும் காட்சி.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் கோட்டை கொத்தளம், சிப்பாய் புரட்சி நினைவு தூண் ஓவியங்கள்

    • போஸ்டர்கள் அகற்றப்பட்டது
    • கல்வித்துறை சார்பில் ஒழுக்க நெறிமுறைகள் ஓவியமாக வரையப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிளில் மேம்பால சுவர்களில் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் மேம்பாலச் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளித்தது. இந்த மேம்பாலச் சுவர்களை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    கிரீன் சர்க்கிளில் இருபுறமும் உள்ள மேம்பால சுவர்களில் பல வகையான ஓவியங்களை வரையும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

    இதற்காக மேம்பால சுவர்களில் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி அதில் வெள்ளை நிற வண்ணம் தீட்டும் பணி நடந்தது.

    கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுவற்றின் ஒரு பகுதியில் வரையப்பட்டுள்ள வேலூர் வரலாற்று சிறப்பு மிகுந்த சிப்பாய் புரட்சி நினைவு தூண், கோட்டை மதில் சுவர் உள்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.

    மேம்பாலத்தின் சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் அரசு நல திட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் ஓவி யமாக வரையப்படுகிறது.

    Next Story
    ×